search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி தற்கொலை"

    • பள்ளிக்கு பொட்டு வைத்து சென்றதால் ஆசிரியர் அடித்ததாக குற்றச்சாட்டு
    • பெற்றோர் போராட்டம் நடத்தியதால் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொட்டு வைத்து பள்ளிக்கு சென்றதால், மாணவியை ஆசிரியர் அடித்துள்ளார். இதனால் மாணவி மனமுடைந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

    நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் போலீசாரால் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த விசயத்தை குழந்தைகள் பாதுகாப்பு உரிமைக்கான தேசிய ஆணையம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த எங்கள் குழு தான்பாத் செல்லும் என அதன் தலைவர் பிரியங் கனூங்கோ தெரிவித்துள்ளார்.

    மேலும், ''இது மிகவும் கவனிக்க வேண்டிய சம்பவம். அந்த பள்ளி சிபிஎஸ்சி-க்கான அங்கீகாரம் பெறவில்லை. இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளேன். நான் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தை சந்திக்க இருக்கிறேன்'' என்றார்.

    இந்த சம்பவம் நேற்று முன்தினம் தன்பாத் தெலுல்மாரி என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது.

    • ரெயில் சென்றதும் சுமார் 20 நிமிடத்திற்கு பின்பு அந்த ரெயில்வே கேட் திறக்கப்பட்டது.
    • உயிரிழப்பு ஏற்படுவதால் விரைவில் மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள விருசங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைசாமி மகள் பிரபாவதி (வயது 18). இவர் கப்பலூர் அரசு கலைக் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை பிரபாவதி குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிரபாவதியை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

    திருமங்கலத்திலிருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டதால் தொடர்ந்து செல்ல முடியாமல் மாட்டிக் கொண்டு நின்றது. அதேபோல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல பெற்றோரும் தயாராக இருந்தனர்.

    ஆம்புலன்ஸ் வாகனம் ரெயில்வே கேட்டில் சிக்கிய தகவல் அறிந்து இருசக்கர வாகனத்தின் நடுவே பிரபாவதியை அமர வைத்துக் கொண்டு ரெயில்வே கேட் பகுதிக்கு வந்தனர். இருந்தபோதிலும் அந்த கேட்டை கடக்க முடியவில்லை. ரெயில் சென்றதும் சுமார் 20 நிமிடத்திற்கு பின்பு அந்த ரெயில்வே கேட் திறக்கப்பட்டது.

    அதன்பின்னர் ரெயில்வே கேட் அருகேயே பிரபாவதியை அவசரம் அவசரமாக 108 ஆம்புலன் சில் ஏற்றி கொண்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என தெரிவித்தனர். இதைக் கேட்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறித்துடித்தனர்.

    இது குறித்து உயிரிழந்த மாணவியின் உறவினகள் கூறுகையில், நாங்கள் இருசக்கர வாகனத்தில் பிரபாவதியை ஏற்றிக் கொண்டு ரெயில்வே கேட்டை அடையும் வரை உயிர் இருந்தது. ஆனால் ரெயில்வே கேட்டில் 20 நிமிடத்திற்கும் மேல் மாட்டி கொண்டு, அதன்பின்பு மருத்துவமனைக்கு வந்த போது அவர் உயிரிழந்து விட்டார். இது எங்களுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் ரெயில்வே பீடர் ரோட்டில் ரெயில்வே கேட் ஒன்று அமைந்துள்ளது. இந்த கேட்டினை கடந்து தான் காமராஜபுரம், கற்பகம் நகர், சோனைமீனா நகர், விடத்தகுளம், விருசங்குளம் உள்ளிட்ட பகுதி மக்கள் சென்று வருகின்றனர்.

    தினமும் 75 முறைக்கும் மேல் திறந்து மூடப்படும் இந்த ரெயில்வே கேட்டினை கடந்து செல்ல மேம்பாலம் அமைக்கவேண்டும் என திருமங்கலம் பகுதி மக்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தினசரி பலமணி நேரம் கேட் அடைப்பில் சிக்கி பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இந்தபகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடலக்நலக்குறைவு ஏற்பட்டாலோ, விபத்தில் சிக்கினாலோ அவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வர ரெயில்வே கேட்டினை கடந்து தான் செல்லவேண்டிய நிலை இருந்து வருகிறது. ஆதலால் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்படுவதால் விரைவில் மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.
    • சிறுமுகை மூலத்துறை பவானி ஆற்றங்கரையில் உள்ள புதரில் ரோஷினி பிணமாக மீட்கப்பட்டார்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் தாசம்பாளையத்தை சேர்ந்தவர் அப்துல் காதர்(வயது42). மருந்துக்கடை உரிமையாளர்.

    இவரது மனைவி ஷர்மிலி(36). இவர்களது மகள் ரோஷினி(13). இவர் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 5-ந் தேதி டியூசன் சென்ற ரோஷினி வீடு திரும்பவில்லை. இதையடுத்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

    இதற்கிடையே மறுநாள் மாணவியின் காலணி மற்றும் சைக்கிள் ஆகியே ரெயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் கிடந்தது. போலீசார் அங்கு சென்று அதனை மீட்டனர்.

    மேலும் மாணவி பவானி ஆற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீயணைப்பு துறை உதவியுடன் ஆற்றில் இறங்கி தேடினர். நேற்று 2-வது நாளாக பவானி ஆற்றில் தேடும் பணி நடந்தது.

    இந்த நிலையில் சிறுமுகை மூலத்துறை பவானி ஆற்றங்கரையில் உள்ள புதரில் ரோஷினி பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    அங்கு அவரது உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மாணவி கடந்த ஆண்டு வரை மெட்ரிக் பள்ளியில் படித்து வந்துள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்பு அவரை மெட்ரிக் பள்ளியில் இருந்து மாற்றி சி.பி.எஸ்.இ பள்ளியில் சேர்த்து விட்டனர். பள்ளி மாறியதால், அவர் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    • வீட்டில் தனியாக இருந்த மாணவி துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மாணவியின் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    சென்னை ஜல்லடையான் பேட்டை தாகூர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ராணி. இவருடைய மகள் யுவஸ்ரீ (20). கவுரிவாக்கத்தில் உள்ள எஸ்.ஐ. வி.டி என்ற கல்லூரியில் பிகாம் ஜென்ரல், 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று மதியம் யுவஸ்ரீயின் தாய் ராணி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் யுவஸ்ரீ தனியாக இருந்த நிலையில் துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மாணவியின் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒரு சாதி சான்றிதழ் வழங்காமல் இருப்பது அரசாங்கத்தின் தோல்வியாக கருகிறோம்.
    • வேலூர் மாவட்ட அதிகாரிகள் பிரிட்டிஷ்காரர்களை போல் மக்களிடம் நடந்து கொள்கின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னியாண்டி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டியல் இன எஸ்.சி சாதி சான்று கேட்டு பலமுறை மனு அளித்துள்ளனர்.

    திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமம் எம்ஜிஆர் நகரில் வசித்தவர் முருகன். இவரது மகள் ராஜேஸ்வரி. தந்தையின் மறைவுக்கு பிறகு தாய் சரோஜாவின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.

    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 375 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி, உயர்கல்வி கனவுகளுடன், கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளார்.

    பன்னியாண்டி சமூகத்தை சேர்ந்த இவருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை.

    அப்போது சாதி சான்று இல்லாததால், மாணவியின் உயர்கல்வி கேள்வி குறியானது. இதனால் மனமுடைந்த அவர், கடந்த 17-ந் தேதி விஷம் குடித்தார்.

    திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றார்.

    இது குறித்து, திருவண்ணாமலை போலீசார் மாணவி ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்த தனக்கு, எஸ்சி சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் வழங்கவில்லை. இது தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகளை முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை.

    என்னுடன் படித்த மாணவிகள், கல்லூரியில் படிக்க செல்கின்றனர். சாதி சான்றிதழ் இல்லாததால், கல்லூரி படிப்பை தொடர முடியாத நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற என்னுடைய கனவு, நிறைவேறாததால், மனமுடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன் என தெரிவித்தார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இது திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்நாடு பன்னியாண்டி சங்கத்தினர் சாதி சான்றிதழ் வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . அவர்கள் இன்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் கூறுகையில்:-

    பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்த மாணவி ராஜேஸ்வரி 12-ம் வகுப்பில் 367 மதிப்பெண் பெற்றும், சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் மேல்படிப்பை தொடர முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.

    இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒரு சாதி சான்றிதழ் வழங்காமல் இருப்பது அரசாங்கத்தின் தோல்வியாக கருகிறோம்.

    வேலூர் மாவட்ட அதிகாரிகள் பிரிட்டிஷ்காரர்களை போல் மக்களிடம் நடந்து கொள்கின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னியாண்டி சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு உடனடியாக பட்டியலென எஸ்சி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் சாதிச் சான்றிதழ் கொடுக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றார்.

    • பள்ளியின் சீருடை அணிந்த மாணவி ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.
    • உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களியக்காவிளை:

    கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், பெயிண்டர். இவருக்கு பென் என்ற மகனும், ஈவிலின் ஜாய் (வயது 16) என்ற மகளும் உள்ளனர். தற்போது சுரேஷ், குடும்பத்தினருடன் களியக்காவிளை அருகே உள்ள தையாலுமூடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

    பளுகல் அருகே மத்தம்பாலையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பென் 12-ம் வகுப்பும், ஈவிலின் ஜாய் 10-ம் வகுப்பும் படித்தனர். இவர்கள் 2 பேரும் தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். ஆனால் இன்று காலை ஈவிலின் ஜாய், பள்ளியில் ஸ்பெசல் வகுப்பு உள்ளதாக வீட்டில் கூறி விட்டு தனியாக பள்ளிக்கு சென்றுள்ளார்.

    இதற்கிடையில் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற அவரது சகோதரன் பென், தங்கையை பார்க்கச்சென்றபோது, அவர் பள்ளிக்கு வரவில்லை என தகவல் கிடைத்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்த நேரத்தில், பள்ளி நிர்வாகத்துக்கு ரெயில்வே போலீசிடம் இருந்து, உங்கள் பள்ளியின் சீருடை அணிந்த மாணவி ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.

    இதனை தொடர்ந்து அங்கு சென்று பார்த்த போது, தற்கொலை செய்தது ஈவிலின் ஜாய் என தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்ற விவரம் தெரியவில்லை. உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவியை ஆசிரியர்கள் மனதளவில் காயப்படுத்தியதால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக சக மாணவர்கள் தெரிவித்தனர்.
    • மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் காஞ்சிரப்பள்ளி பகுதியில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு திருப்பூணித்துறையைச் சேர்ந்த மாணவி ஸ்ரத்தா சதீஷ் (வயது20) இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று கல்லூரி ஆய்வுக்கூடத்துக்குச் சென்றபோது அவரிடம் இருந்த செல்போனை ஆசிரியர்கள் வாங்கியதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் அவர் விடுதி அறையில் மின் விசிறியில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்த சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். கல்லூரி நிர்வாகிகள் விரைந்து வந்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரத்தா சதீஷ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சக மாணவர்கள் கூறும்போது, மாணவியை ஆசிரியர்கள் மனதளவில் காயப்படுத்தியதால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். மாணவியின் பெற்றோர் கூறுகையில், 'எங்கள் மகளை கல்லூரி ஆய்வகத்தில் துன்புறுத்தியிருக்கிறார்கள். மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் அலட்சியம் காட்டியதுடன், டாக்டரிடம் தூக்கில் தொங்கியதை மறைத்து தலைச்சுற்றி கீழே விழுந்ததாக கூறியுள்ளனர். இதனால், சரியான முறையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு, எங்கள் மகள் இறந்தார்' என்றனர்.

    இதற்கிடையே மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்த வழக்கில் சமரசம் ஏற்படுத்த கல்லூரி நிர்வாகம் முயல்வதாக கூறி மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த சமயத்தில் சில மாணவர்களை போலீசார் தாக்கியதாகப் புகார் எழுந்தது.

    இதற்கிடையே கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டது. மாணவி மரணம் குறித்து மாநில இளைஞர் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கிறது.

    இந்தநிலையில், நேற்று கேரள உயர் கல்வித்துறை மந்திரி பிந்து தலைமையில் கல்லூரியில் வைத்து அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மந்திரி வாசவன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் மந்திரி பிந்து கூறும்போது, 'மாணவி தற்கொலை குறித்து கேரள குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவார்கள்' என்றார். இதை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மாணவ அமைப்பினர் அறிவித்து உள்ளனர்.

    • விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு உருக்கமான கடிதம் ஒன்றை அவர் எழுதி வைத்துள்ளார்.
    • என் மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை. என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்த வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் சின்ன ராஜ குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. கூலித் தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். தினமும் குடித்து விட்டு வீட்டில் சண்டை போட்டதால் மனைவி, பிள்ளைகள் அனைவரும் நிம்மதி இல்லாமல் தவித்துள்ளார்கள்.

    இதனால் வேதனை அடைந்த மகள் விஷ்ணு பிரியா (16) தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விஷ்ணு பிரியா 10-ம் வகுப்பு தேர்வில் 410 மதிப்பெண் பெற்றிருந்தார். அடுத்து மேல்நிலைப்பள்ளி படிப்புக்கு தயாராகி வந்த நிலையில் தந்தையின் குடிப்பழக்கத்தால் இப்படி ஒரு துயர முடிவை எடுத்துள்ளார்.

    தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு உருக்கமான கடிதம் ஒன்றை அவர் எழுதி வைத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    "என் மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை. என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்த வேண்டும். என் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இதை எப்போது காண்பேனோ அப்போதுதான் என் ஆன்மா சாந்தியடையும். நன்றி. எனது குடும்பம் நல்ல குடும்பம். அப்பா, போய் வருகிறேன்... என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

    • விரக்தியில் காணப்பட்ட காளியம்மாள் கடந்த 24-ந்தேதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காளியம்மாள் அனுமதிக்கப்பட்டார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மன்னார். விவசாயி. இவரது மகள் காளியம்மாள். இவர் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் தான் பிளஸ்-2க்கு பிறகு எம்.பி.பி.எஸ். மருத்துவம் படிப்பதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு அவரது தந்தை மன்னார் மறுத்துள்ளார்.

    இதனால் விரக்தியில் காணப்பட்ட காளியம்மாள் கடந்த 24-ந்தேதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் மாணவியை மீட்டு உடனே சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு மாணவி காளியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மன்னார் அஞ்செட்டி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மருத்தும் படிக்க கூடாது என்று தந்தை மறுத்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சமீபத்தில் வெளியான 10-ம் வகுப்பு தேர்வு முடிவில் மாணவி ராகவி 193 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார்.
    • குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மாணவி ராகவி மிகவும் மனவேதனை அடைந்தார்.

    அம்பத்தூர்:

    கொரட்டூர், கக்கன்ஜி தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். பெயிண்டர். இவரது மகள் ராகவி (வயது15). தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சமீபத்தில் வெளியான 10-ம் வகுப்பு தேர்வு முடிவில் மாணவி ராகவி 193 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார். குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அவர் மிகவும் மனவேதனை அடைந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி மேல்படிப்பு படிக்க அறிவுறுத்தி வந்தனர்.

    எனினும் எதிர்பார்த்த மதிப்பெண் வராததால் மாணவி ராகவி தொடர்ந்து மனமுடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த போது அறைக்குள் சென்ற ராகவி திடீரென மின் விசிறியில் தூக்குப்போட்டு தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ராகவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இன்று காலை சிகிச்சை பலனின்றி ராகவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொரட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சிறிது நேரம் கழித்து மற்ற மாணவிகள் வந்து பார்த்த போது விடுதி அறையில் ஜெயா தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பூந்தமல்லி:

    பள்ளிப்பட்டு அடுத்த ஸ்ரீகாளிங்கபுரத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகள் ஜெயா (வயது19). இவர் பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு விடுதி அறையில் உடன் தங்கி இருந்த மாணவிகள் படிப்பதற்காக மற்றொரு இடத்திற்கு சென்று இருந்தனர். அறையில் மாணவி ஜெயா மட்டும் இருந்தார்.

    சிறிது நேரம் கழித்து மற்ற மாணவிகள் வந்து பார்த்த போது விடுதி அறையில் ஜெயா தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பரிசோதித்த டாக்டர்கள் மாணவி ஜெயா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் உடன் படிக்கும் மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினருக்கும், நசரத்பேட்டை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நேற்று இரவு உடன் தங்கிஇருந்த மாணவிகள் இரவு படிப்பிற்காக சென்ற போது ஜெயா, தனக்கு தலை வலிப்பதாக கூறி செல்லவில்லை. இந்த நிலையில் அறையில் தனியாக இருந்தபோது மாணவி ஜெயா தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

    அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரிய வில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் மாணவியின் செல்போனை கைப்பற்றி அவர் கடைசியாக யாரிடம் பேசினார் என்ற விபரத்தையும் சேகரித்து வருகிறார்கள். கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவர்களும், மாணவிகளும் மதிப்பெண் குறைந்தால் வேறு படிப்புகளில் சேர்ந்து வாழ்க்கையில் முன்னேறலாம்.
    • மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள சென்னப்பநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சவுபாக்கியலட்சுமி. இவர் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின.

    இதில் மாணவி சவுபாக்கியலட்சுமி தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளதாக தெரியவந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் தனியாக இருந்தபோது திடீரென்று வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த எம்.எல்.ஏ.கள் ஜி.கே.மணி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு மாணவிக்கு உயர் சிகிச்சை வழங்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினர்.

    இச்சம்பவம் குறித்து பேசிய ஜி.கே.மணி கூறுகையில், மதிப்பெண் குறைந்ததால் சவுபாக்கிய லட்சுமி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    மாணவர்களும், மாணவிகளும் மதிப்பெண் குறைந்தால் வேறு படிப்புகளில் சேர்ந்து வாழ்க்கையில் முன்னே–றலாம். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வேண்டும். மதிப்பெண் குறைந்ததால் தற்கொலைக்கு முயற்சி செய்வது தேவையற்றது கோழைத்தனமானது. இப்படிப்பட்ட முயற்சிகளில் யாரும் ஈடுபடக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார்.

    ×